மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டினால் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவ கழிவுகள் (Medical Waste)
புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவமனைகள், பொதுசுகாதார மையங்கள் மற்றும் பரிசோதனை ஆய்வு கூடங்களில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவக்கழிவுகள் நகராட்சி அல்லது பஞ்சாயத்து திடக்கழிவு தொட்டிகளில் கொட்டப்படுகிறது.
இத்தகைய செயல்பாடுகள் துப்புரவு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். உயர் மருத்துவக்கழிவு மேலாண்மை விதி 2016-ன் படி அதற்குரிய தொட்டிகளில் சேகரித்து துத்திப்பட்டில் உள்ள பொதுமருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் மூலமாக அதை முறையாக வெளியேற்ற வேண்டும்.
உரிமம் ரத்து
இதை மீறி செயல்படும் மருத்துவமனை, பொது சுகாதார மையம், பரிசோதனை கூடங்களில் வணிக உரிமம் ரத்து செய்யப்படும். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும்.
மேலும் படிக்க
Share your comments