நாடு முழுவதும், தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள பலர் சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி சனி, ஞாயிறு, திங்கள் என மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால் இந்த ஆண்டு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை மிகவும் கூடுதலாகவே இருக்கிறது.
தீபாவளி பண்டிகை
தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்கிழமை வேலை நாளாக உள்ளதால் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அன்றே மக்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்பி வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதே சூழல் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பொருந்தும் என்பதால் மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடும் விதமாக 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 25ம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க
தீபாவளிக்கு ஊருக்கு செல்ல தட்கலில் ரயில் டிக்கெட்: ஈஸியான வழிமுறை இதோ!
குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு: விரைவில் அனைத்து மாநிலங்களிலும்!
Share your comments