பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் இந்த வேலையில் பல்வேறு நிறுவனங்களும் பண்டிகை கால சலுகைகளை முன்னிறுத்தி தங்கள் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்வதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வரப்போகும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக அளிக்கப்படும் தீபாவளி விழாக்கால சலுகைகளில் தங்கள் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொண்டு வர ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
செப்டம்பர் 26 திங்கட்கிழமை தொடங்கப்போகும் இந்த சலுகை விழாவில் பல முக்கியமான பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னென்ன பொருட்கள் எந்த விலையில் விற்கப்படும் என்பது போன்ற முழு தகவல்களை ஆப்பிள் நிறுவனம் இப்போது வரை அறிவிக்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாட்டை ஒப்பிட்டு பார்க்கும்போது ஐபோன்களுக்கான சலுகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 14 சீரிஸ் வகை வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியுள்ளது. ஐபோன் 14 சீரியஸ் ஒருபுறம் இருந்தாலும் சிலர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11, ஐ போன் 12 மாடல்களை வாங்குவதிலும் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே இந்த மாடல்களின் மீதும் அதிக விலை சலுகைகளை புகுத்தி இதனை அதிக அளவில் ஆப்பிள் நிறுவனம் விற்க முயற்சி செய்யலாம் என்பது போலவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
விலை சலுகைகளை மட்டுமல்லாமல் சில இலவச பொருட்களையும் இணைத்து விற்பனையை அதிகரிக்க செய்ய ஆப்பிள் நிறுவனம் முயற்சிக்கலாம். அந்த வகையில் ஐபோன் வாங்குபவருக்கு கூடவே ஏர் பாட்-களும் இலவசமாக கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. ஏனெனில் கடந்த காலங்களில் ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 13 மினி ஆகியவை சந்தைக்கு வந்தபோது அதனுடன் ஏர் பாட்ஸ் இலவசம் என்ற சலுகையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஐபோன்களை விற்று தீர்த்தது ஆப்பிள் நிறுவனம்.
முக்கியமாக இந்தியாவில் ஐபோன்களுக்கான ரசிகர்கள் அதிகரித்துவிட்ட காரணத்தினால் இந்த சலுகை பெருமளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு கை கொடுக்கும் என்று தெரிகிறது.ஐபோன் தவிர்த்து மேக் புக், ஐபேட், மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகிய பொருட்களுக்கும் சலுகைகள் அளிக்கப்படலாம். ஆனால் எது எப்படி இருப்பினும் ஐபோன்களை அதிக அளவில் விற்பனை செய்வது தான் அன்ன நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்கும். ஏனெனில் ஐபோன்களின் மூலம்தான் அதிக பங்குகளை அந்நிறுவனம் ஈர்த்துள்ளது.
மேலும் இந்த விலைச்சலுகைகளை பெறுவதற்காக சில வங்கிகளுடன் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொண்டும், கேஷ் பேக் ஆஃபர்கள் மற்றும் கூப்பன்கள் ஆகிய பல முறைகளில் சலுகைகளை அளிக்க ஆப்பிள் நிறுவனம் தயாராகி வருகிறது. ஏற்கனவே ஆப்பிள் 14 சீரியஸ் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில், அதன் மீது அளிக்கப்படும் விலை சலுகைகள் இன்னும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க
Share your comments