1. செய்திகள்

மின்மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம் வழங்கப்படும் - திமுக வேட்பாளர் அறிவிப்பு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

மின் மோட்டார்கள் வாங்க விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவிவருகிறது.

இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து கட்சி வேட்காளர்களும் தங்கள் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திமுக வேட்பாளர் பிரச்சாரம்

இந்நிலையில், தாராபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் மூலனூர் மற்றும் ஒன்றிய பகுதியான நாடார் வலசு, மூக்குதரிச்சான் பாளையம், நஞ்சைதலையூர், புஞ்சை தலையூர் ஆகிய 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விவசாயிகளுக்கு அள்ள வழங்கப்பட்ட வாக்குறுதிகள்

  • அப்போது பேசிய அவர், மூலனூர் பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றார்.

  • திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி விவசாயிகள் வாங்கும் மின்சார பம்பு செட்டுகளுக்கு ரூ.10,000 மானிய தொகை வழங்கப்படும்.

  • மூலனூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வெளியூர் வெளிமாவட்ட வியாபாரிகள் வருகைக்கு வழிவகை காணப்படும்.

  • 100 நாள் வேலைத்திட்டம் நூற்றி ஐம்பது நாளாக நீட்டிக்கப்படும் என அவர் மக்களுக்கு உறுதி அளித்து பிரச்சாரம் செய்தார்.

  • இதேபோல் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க பயன்படும் கண்வலி கிழங்கு விதைக்கு கட்டுபடியாகும் விலை நிர்ணயம் செய்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசுத்துறை சார்ந்த நிறுவனம் மூலனூரில் துவங்கப்படும் எனவும் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க...

Election 2021: சூடுபிடிக்கும் தேர்தல் களம் : விவசாயத்தை முன்னிறுத்தும் தேர்தல் பிரச்சாரங்கள்!!

Election 2021: ஏப்ரல் 3ம் தேதி முதல் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துக்குத் தடை!

English Summary: DMK candidate announced Rs 10,000 subsidy Will be provided to farmers for electric motors

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.