1. செய்திகள்

அறுவடைக்கு பிந்தைய பயிர் தட்டைகளை எரிக்க வேண்டாம்! உரமாக்கலாம் வாருங்கள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பொதுவாக பயிர் அறுவடைக்கு பிந்தைய பயிர் தட்டைகளை விவசாயிகள் எரிப்பது வழக்கம். இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என வேளாண்துறை எச்சரித்துள்ளது. மேலும், மதுரையில் நெல் உட்பட பயறு வகை கதிர்களின் அறுவடைக்கு பிந்தைய அவற்றின் தட்டைகளை வெட்டி உரமாக்கும் வகையில் புதிய இயந்திரம் நடைமுறைக்கு வந்துள்ளதயும் தெரிவித்துள்ளது.

அறுவடைக்கு பிந்தைய தட்டைகள்

கம்பு, சோளம், நிலக்கடலை, பருத்தி பயிர்களில் அறுவடைக்கு பின் இத்தட்டைகள் உடனடியாக மண்ணில் மட்காது. அடுத்த பயிர் சாகுபடி செய்வதற்கு தாமதம் ஆகும் என்பதால் விவசாயிகள் தீ வைக்கின்றனர். தீ வைப்பதால் மண் வளம் கெடுவதோடு மண்ணிலுள்ள சத்துகளும் அழிக்கப்படுகின்றன.

ரோட்டரி மல்ச்சர்

அறுவடைக்கு பிந்தைய தட்டைகளை எரிப்பதற்கு மாற்றாக 'ரோட்டரி மல்ச்சர்' இயந்திரத்தின் மூலம் தட்டைகளை சிறு துண்டுகளாக வெட்டி நிலப் போர்வையாக பயன்படுத்தலாம் என்கிறார் மதுரை விவசாய கல்லுாரி தலைவர் பால்பாண்டி, மற்றும் உழவியல் துறை உதவி பேராசிரியர் சுப்ரமணியன் ஆகியோர்.

நீர் ஆவியாவதை தடுக்கும்

ரோட்டரி மல்ச்சர் குறித்து பேராசிரியர்கள் கூறுகையில், அறுவடைக்கு பின் பயிர் தட்டைகளை அழிப்பதே விவசாயிகளுக்கு பெரிய பிரச்னை. அப்படியே விட்டால் அடுத்து பயிர் செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்த புதிய 'ரோட்டரி மல்ச்சர்' இயந்திரம் மூலம் ஒரு ஏக்கரில் உள்ள தட்டைகளை 2 மணி நேரத்திற்குள் சிறுசிறு துண்டுகளாக்கி விடலாம். இயந்திரம் தட்டைகளை வெட்டி துண்டுகளாக்கி கொண்டே செல்லும். இந்த சிறு தட்டைகள் வயலுக்கு நிலப் போர்வையாக மாறி மண்ணில் இருந்து நீர் ஆவியாவதை தடுக்கிறது.

மண் வளத்தை காக்கும்

மழை பெய்தால் நீர்ப்பிடிப்பு தன்மையுடையதாக மாறி நீரை தேக்கி வைக்கும். உரமாக மாறுவதால் மண்ணை சத்தானதாக மாற்றும். உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் இந்த இயந்திரத்தை வாங்கி விவசாயிகளுக்கு வாடகைக்கு விட்டால் மண்வளம் மொத்தமாக பாதுகாக்கப்படும். இந்த இயந்திரத்தின் செயல் விளக்கும் குறித்த பயிற்சிகள் மதுரை விவசாய கல்லுாரியில் அளிக்கப்படுகிறது என்றனர். தேவையான விவசாயிகள் பயிற்சி பெற்று பயனடையலாம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க....

கோடை மற்றும் மானாவாரிக்கு ஏற்ற பருத்தி ரகங்கள் எவை?

விவசாயிகள் தங்கள் விவசாயத்தோடு தேனீ வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் - மோடி உரை!!

பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!

English Summary: Do not burn post-harvest crop Residue it can be compost

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.