கொரோனா வைரசின் தன்மை நம் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதால் அடுத்தடுத்த அலைகள் எப்போதும் உருவாகும் என்பதற்கு தேதி குறிப்பதை தவிர்க்க வேண்டும் என, கொரோனா தடுப்பு படையின் தலைவர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளர்.
டெல்டா பிளஸ்
கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல் - மே மாதங்களில் மிக தீவிரமாக பரவியது. ஒரு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்தன. 'இந்த இரண்டாவது அலைக்கு (second wave) உருமாற்றம் அடைந்த 'டெல்டா' வகை வைரஸ் தாக்கமே காரணம்' எனக் கூறப்பட்டது. இந்நிலையில் 'டெல்டா பிளஸ்' (Delta plus) என்ற புதிய உருமாறிய வைரஸ் வகை சமீபத்தில் கண்டறியப்பட்டது.
மூன்றாவது அலை
மூன்றாவது அலை உருவாவதை தவிர்க்க முடியாது என்றும் இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் நிபுணர்கள் எச்சரித்தனர். 'டிசம்பரில் மூன்றாவது அலை உருவாக வாய்ப்பு உள்ளது' என மத்திய அரசின் கொரோனா பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா சமீபத்தில் தெரிவித்தார்.
இது குறித்து கொரோனா தடுப்பு படை தலைவரும், நிடி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் நேற்று கூறியதாவது: உருமாறிய 'டெல்டா பிளஸ்' என்ற புதிய வகை வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த அறிவியல் பூர்வமான விபரங்கள் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளன.
இது புதிய வகை தொற்று வேகமாக பரவும் தன்மை உடையதா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமா தடுப்பூசியின் (Vaccine) செயல்திறனை பாதிக்குமா என்பது போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் முழுமையான பதில் இல்லை. இதற்கு நாம் சில காலம் காத்திருக்க வேண்டும். தொற்று பரவலின் தன்மை என்பது நம் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது.
புதிய அலை உருவாவதும், உருவாகாமல் இருப்பதும் நம் கைகளில் உள்ளது. அப்படி இருக்கையில் அடுத்தடுத்த அலைகள் எப்போது நிகழும் என்பது குறித்து தேதிகள் நிர்ணயிக்காமல் இருப்பதே நலம்.
மேலும் படிக்க
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி பி ஏவுகணையின் சோதனை வெற்றி
சிறு வியாபாரிகளுக்கு ரூ.1.25 லட்சம் கடன்: நிர்மலா சீதாராமன் அதிரடி
Share your comments