1. செய்திகள்

GST வசூல் எவ்வளவு தெரியுமா? 10 மாதங்களாக தொடர் சாதனை!

R. Balakrishnan
R. Balakrishnan

GST collection

தொடர்ந்து 10 மாதங்களாக மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டியின் கீழ் சென்ற 2022 டிசம்பர் மாதத்தில் மொத்தம் ரூ.1,49,507 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.26,711 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.33,357 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.78,434 கோடி (இறக்குமதி சரக்குகள் மீதான வசூல் ரூ.40,263 கோடி உட்பட) செஸ் வரி வசூல் ரூ. 11,005 கோடி என்ற அளவில் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி (GST)

கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழகத்திலிருந்து ரூ.8,324 கோடி வசூலாகியிருக்கிறது. இது முந்தைய ஆண்டு டிசம்பர் வசூலான ரூ. 6,635 கோடியை விட 25 சதவீதம் அதிகமாகும். புதுச்சேரியில் 30 சதவீதம் அதிகமாக வசூலாகி இருக்கிறது. முடிந்த டிசம்பரில் ரூ.192 கோடியும், முந்தைய ஆண்டில் ரூ.147 கோடியும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு 36,669 கோடி ரூபாயை மத்திய ஜிஎஸ்டிக்கும், 31,094 கோடியை மாநில ஜிஎஸ்டிக்கும் வழக்கமான தீர்வாக செலுத்தியுள்ளது. 2022 டிசம்பர் மாதத்தில் வழக்கமான தீர்வுகளுக்குப் பிறகு மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் முறையே ரூ 63,380 கோடி மற்றும் ரூ 64,451 கோடியாக இருந்துள்ளது.

2022 டிசம்பர் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாத ஜிஎஸ்டி வருவாயை விட 15 சதவீதம் அதிகமாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 8 சதவீதம் அதிகமாக இருந்தது. உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட வருவாயை விட 18 சதவீதம் அதிகமாகும்.

2022 நவம்பர் மாதத்தில், 7.9 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது 2022 அக்டோபர் மாதத்தில் உருவாக்கப்பட்ட 7.6 கோடி இ-வே பில்களை விட அதிகமாகும். கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் இன்னும் அதிகமாக வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

புத்தாண்டில் வணிக சிலிண்டர் விலை உயர்வு: கலக்கத்தில் பொதுமக்கள்!

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: சிறு சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்வு!

English Summary: Do you know how much GST is collected? A streak of 10 months!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.