1. செய்திகள்

திருப்பதி கோவில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Tirupati Temple

சமீபத்தில் திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. மேலும் தேவஸ்தான வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்களில் ஒரு பகுதியை , மத்திய, மாநில அரசுகளின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல் பரவின.

இவை அனைத்தும் தவறானவை. முற்றிலும் உண்மைக்கு புறம்பான மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்று தேவஸ்தானம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொத்து மதிப்பு குறித்து வெள்ள அறிக்கை தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,” திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு ரூ. 2.26 லட்சம் கோடி. கடந்த 2019 ஆம் ஆண்டு தேவஸ்தானம் சார்பில் தேசியமயமாக்கப்பட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.13,025 கோடி நிரந்தர வைப்புநிதியாக (Deposit) வைக்கப்பட்டது.

தற்போது அசல் மற்றும் வட்டியை சேர்த்து ரூ.15,938 கோடியாக உள்ளது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் திருமலை திருப்பதி கோவிலில் முதலீடு ரூ.2,900 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு பல்வேறு வங்கிகளில் 7339.74 டன் தங்கம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 2.9 டன் தங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

மொத்தம் திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக ரூ.5,300 கோடி மதிப்பில் 10.3 டன் தங்கம் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. அதே போல் ரொக்கமாக ரூ.15, 938 கோடி உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் 7,123 ஏக்கரில் 960 சொத்துகள் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

கரும்பு விவசாயிகளுக்கு நற்செய்தி, என்ன தெரியுமா?

 நவ.15 க்குள் பயிர்களுக்கு காப்பீடு செய்துவிடுங்கள்

English Summary: Do you know how much Tirupati temple property is worth? Published on: 06 November 2022, 07:35 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.