1. செய்திகள்

கொடைக்கானலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துள்ள கற்றாழை பூ

KJ Staff
KJ Staff
Aloe Vera

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நூற்றுக்கும் அதிகமான மலா் வகைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த மலை பகுதில் அவ்வப்போது அரிய வகை மலர்கள் பூத்து குலுங்குகின்றன.   அந்த வகையில் கற்றாளைச் செடியில் பூத்துள்ள பூவை காண பொது மக்கள் ஆவலுடன் வருகின்றனா். 

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் 80-க்கும் அதிகமான கற்றாளை வகைகள் வளா்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் வெகுவாக பாா்த்து ரசிக்கும் இடங்களில் இந்த பூங்காவும் ஒன்று.

மண் சரிவுகளை தடுக்கும் ஆற்றல் கொண்ட ஒரு வகையான கற்றாளைச் செடி கொடைக்கானல் காவல் நிலையத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவை அளவில் பெரியதாகவும், மண்ணில் நிலைத்து வலிமையான பிடிப்புடன் வளரக்கூடியது. இந்த அரிய வகை கற்றாளைச் செடியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மலர்ந்துள்ள மலரை காண பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். பார்ப்பதற்கு யானையின் தும்பிக்கை போன்று வளைந்து வெண்மை மற்றும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Do you know the rare variety Of Aloe Vera which Blooms once in forty years Published on: 11 October 2019, 02:10 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.