1. செய்திகள்

டிரெண்டாகும் அரக்கு காபி- எங்க விளையுது? என்ன சிறப்புனு தெரியுமா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
PM modi conversations over araku cofee

சமீபத்தில் ஒளிப்பரப்பான 111-வது "மனதின் குரல்" (மன் கி பாத்) நிகழ்ச்சியில் அரக்கு காபியின் சுவை குறித்தும், அதனுடைய சிறப்புகளையும்- பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். உடனே இணையத்தில் அரக்கு காபி குறித்து தேடுதல் வேட்டையில் இறங்கினர் இணையவாசிகள்.

ஆந்திர அரக்கு காபி குறித்து பிரதமர் பேசியதோடு மட்டுமில்லாமல் தனது X வலைத்தளத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் அரக்கு காபி அருந்தியது தொடர்பான புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார். பிரதமரின் பதிவுக்கு ஆந்திரா மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும்  நன்றி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அரக்கு காபி எங்கே பயிரிடப்படுகிறது ? அவற்றின் சிறப்புகள் என்ன? என்பது குறித்து வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திரசேகரன் கிரிஷி ஜாக்ரனுடன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-

ஆந்திர அரக்கு காபி:

ஆந்திரப்பிரதேச  மாநிலத்தின் காப்பு காடுகளில் அரக்கு நதியின் பகுதியில் பலாப்பழம், சில்வர்ஓக் மரங்களின் நிழல் பகுதியில் இந்த அரக்கு காபி பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த காபியின் செழுமையான சுவைமிக்க நறுமணத்திற்காகவே உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஆந்திராவின் அல்லூரி சீதா ராமராஜ் மாவட்டத்தில் இது அதிகமாக பயிரிடப்படுகின்றன. சுமார் 150 லட்சம் பழங்குடியினர் இந்த காபி சாகுபடியில் எவ்வித இரசாயன உரமுமின்றி, முழுக்க முழுக்க இயற்கை உரங்களால் இதனை விளைவித்து வருகின்றனர்.

காபியின் நறுமணத்திற்கு காரணம் என்ன?

அரக்கு நதியின் தண்ணீர் மற்றும் இயற்கையான வளமான மண்ணில் காபி சாகுபடி செய்யப்படுவதே இதன் நறுமண சுவைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அரகு என்ற பெயருக்கு "நீர் இடம்" என்று பொருள். அரக்கு காபியில் ஏலக்காய், சீரகம், தேங்காய், கேரமல் மற்றும் காரமான மிளகாய்களை நினைவூட்டும் ஒரு மண்வாசனை மிக்க சுவை உள்ளடங்கியுள்ளது.

அறுவடை எப்போது?

மரங்களுக்கு அடியில் நிழலில் சின்ன சிறு புதர்களை போல காட்சியளிக்கும் அரக்கு காபி பயிரின் அறுவடை காலம் டிசம்பர்-ஜனவரியில் முடிவடையும். காபி பழத்தை கூழ் செய்து வறுத்து பின்னர் காபித்தூள் தயாரிக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஆர்கானிக் காபியாகும். அரக்கு காபி இங்கு மட்டுமல்லாது இந்தோனேசியாவிலும் பரவலாக பயிரிடப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

அரக்கு காபி 100 கிராம் தற்போது ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. பழங்குடியின விவசாயிகளை ஒருங்கிணைத்த GCC என்ற கிரிஜன் கூட்டுறவு அமைப்பு அரக்கு காபி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. பழங்குடியின மக்கள் அரக்கு காபியில் நிலையான வருமானம் ஈட்டுவதற்கு காரணமாக விளங்கும் கிரிஜன் கூட்டுறவு அமைப்பு குறித்தும் பிரதமர் மோடி தனது உரையில் பேசியிருந்தார்.

அரக்கு காபியின் சிறப்பம்சங்கள்:

இந்த காபிக்கு 2019-ஆம் ஆண்டு புவிசார் குறியீடு (GEOGRAPHICAL INDEX) வழங்கப்பட்டுள்ளது. 2018- ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த பிரிக்ஸ் எபிக்கூர்ஸ் நிகழ்வில் சிறப்பு விருதினை வென்றுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைப்பெற்ற G20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலகத்தலைவர்களின் கவனத்தையும், பாரட்டினையும் அரக்கு காபி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

(இக்கட்டுரை தொடர்பான தகவல்களில் ஏதேனும் முரண்கள்/ சந்தேகங்கள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு எண்: 94435 70289)

Read more:

625 சதுர அடி நிலம் போதும்- நாட்டுக் கோழி வளர்க்க 50 சதவீத மானியம்!

குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

English Summary: Do you know what is special about where araku coffee is grow Published on: 05 July 2024, 12:41 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.