1. செய்திகள்

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? 12 ஆம் தேதி குறைதீர் முகாம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Ration card correction

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளைக் குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்து. அதன்படி, இந்த ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 12.11.2022 அன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

ரேஷன் கார்டு திருத்தம் (Ration Card Correction)

முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைப் பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்தி அவர்களுக்குத் தேவையான திருத்தங்களை எளிதாகச் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் ரத்து: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

மாதம் 1000 ரூபாய் போதும்: லட்ச ரூபாய் பென்சன் கிடைக்கும்!

English Summary: Do you want to amend your ration card? On the 12th, Grievance Camp! Published on: 10 November 2022, 07:53 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.