வங்கிகளின் ஆளுமை கோலோச்சிய காலம் முதலே கிராம மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவை என்றால் அவை அஞ்சலகங்களே. அதனால்தான் தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலக சேமிப்பை தங்கள் தலையாயக் கடமையாகச் செய்து வருகின்றனர்.
அஞ்சலக வேலைவாய்ப்பு (Postal job)
இத்தகைய சிறப்பு பெற்ற அஞ்சலகங்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், 2 வகை முகவர்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதில் முதலாவது, அஞ்சலக முகவர். 2வது அஞ்சலக ஏஜென்ட். அடுத்தவரிடம் கைகட்டி வேலைபார்ப்பதைவிட, சிறிய தொழில் தொடங்கலாம் என நினைக்கும் இளைஞர்களுக்கு இந்த அஞ்சலக முகவர் பணி சிறந்ததாக இருக்கும்.
அதுவும் கொரோனா நெருக்கடியில் வேலையிழந்து சொந்த ஊர் திரும்பியுள்ள இளைய தலைமுறையினருக்கு இது மிகச் சிறந்த சாய்ஸ்ஸாக இருக்கும். அஞ்சலக முகவராக வேண்டுமெனில் குறைந்த முதலீட்டாக 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துவிட்டு, அஞ்சலகத்துறையினர் தரும் வழிகாட்டதல்களின்படி பணியாற்ற வேண்டும்.
அஞ்சலக முகவர் (Postal Franchises)
இந்த அஞ்சலக முகவர்கள், கவுன்டர் சர்வீஸ் (counter service)செய்யும் வகையில் இருக்கும். அதாவது அஞ்சலகம் இல்லாத இடங்களில் இவர்கள் அஞ்சலகக் கவுன்டர்களை உருவாக்கி, தபால்தலை, மனிஆர்டர் ஃபார்ம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய வேண்டும்.
அஞ்சலக ஏஜென்ட் (Postal Agent)
அஞ்சல ஏஜெண்ட் என்பவர்கள் நகரம் மற்றும் கிராமங்களுக்குச் சென்று வீடு வீடாக தபால்தலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி(How to apply)
அஞ்சலக முகவராக விரும்புபவர்கள் https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf.
என்ற இந்த linkற்குள் சென்று இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யவேண்டும்.பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அருகில் உள்ள தபால்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நீங்கள் தகுதியானவராக இருந்தால், உங்களுடன் தபால்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, முகவராக செயல்பட அனுமதிக்கும்.
மேலும் படிக்க...
அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹெக்டேருக்கு ரூ.4ஆயிரம்- வேளாண்துறை அறிவிப்பு!
Share your comments