1. செய்திகள்

உலை கொதிக்குமா இனி? வீட்டு, வணிக சிலிண்டரின் விலை கிடுகிடு உயர்வு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 14.2 கிலோ எடையுள்ள உள்நாட்டு திரவ எரிவாயு (எல்பிஜி) சிலிண்டரின் விலை ₹50 உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்திய திருத்தப்பட்ட விலையின் அடிப்படையில், சென்னையில் இன்று முதல் சிலிண்டரின் விலை ₹1118 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் சிலிண்டரின் விலை யாரும் எதிர்பாராத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 19 கிலோ கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலை ₹350.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மூலம் டெல்லியில் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ₹2119.50 ஆக இருக்கும். புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளன.

மாநிலங்கள் வாரியாக சிலிண்டரின் விலை:

டெல்லியில் 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் புதிய திருத்தப்பட்ட விலை இன்று முதல் ₹1103 ஆக இருக்கும். இதற்கு முந்தைய விலை ₹1053 என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல் மும்பையில் சிலிண்டரின் விலை ₹1052.50க்கு பதிலாக ₹1102.5க்கு விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் ₹1079க்கு பதிலாக ₹1129 ஆகவும், சென்னையில் ₹1068.50க்கு பதிலாக ₹1118.50 ஆகவும் இருக்கும். இந்த ஆண்டில் வணிக ரீதியில் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, ஜனவரி 1 ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை யூனிட்டுக்கு ₹25 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் டெல்லியில் ரூ.1769க்கு பதிலாக ரூ.2119.5க்கு கிடைக்கும். கொல்கத்தாவில் ₹1870 ஆக இருந்தது, தற்போது ₹2221.5 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் இதன் விலை ₹1721-ல் இருந்து ₹2071.50 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ₹1917-க்கு கிடைத்த சிலிண்டர் இனி ₹2268-க்கு கிடைக்கும்.

மாநில அரசு விதிக்கும் வரிகள் காரணமாக உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடுகிறது. எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விலை நிர்ணயம் அந்நிய செலாவணி விகிதங்கள், கச்சா எண்ணெய் விலை போன்ற பல காரணிகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றனர். விலை உயர்வால் அடித்தட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் ஒரு வருடத்தில் தலா 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற இயலும். PAHAL (எல்பிஜியின் நேரடி பயன் பரிமாற்றம்) திட்டத்தின் கீழ், நுகர்வோர் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்களைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

புத்தூரில் ஒருங்கிணைந்த விதைச்சான்று மையம்- நிம்மதி பெருமூச்சு விட்ட 3 மாவட்ட விவசாயிகள்

English Summary: domestic lpg cylinder price hiked by 50 rupees from today Published on: 01 March 2023, 10:41 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.