Don't panic about tomato flu: Health Minister Hope
தக்காளி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். காய்ச்சல் குறித்து அவர் கூறிய செய்தியை தெரிந்துக்கொள்ளுங்கள்.
பெரும்பாவூர்,
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கோட்டயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- கேரளாவில் ஒருசில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். ஒரு மாவட்டத்தில் கூட, இந்த நோய் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது. அத்துடன் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் இல்லை எனவும் கூறிய அவர்.
மேலும், இந்த நோய் மூலம் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றாலும், மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட இது காரணமாகும் என்பது உண்மைதான் என கூறினார். ஆகவே பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
Kalakshetra அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2022: சம்பளம் 1லட்சம்!
மேலும் இந்த நோய் 5 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை மட்டுமே தாக்குவதால் குழந்தைகள் பாதுகாப்பாக கண்காணிக்கப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இந்த நோய் தோன்றுவதாக ஏதாவது அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதில் அலட்சியம் கூடாது. குழந்தைகளுக்கு இந்த நோய் பரவாமல் இருக்க நோய்வாய்பட்டவர்களை தனிமைப்படுத்துதலும், மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் உடனடியாக உரிய மருந்துகளை எடுத்துக்கொள்வதும், குழந்தைகளுக்கு போதுமான அளவிற்கு குடிநீர் வழங்குவதும் முக்கியமாகும் என அவர் கூறினார்.
News: 4 நாட்களில் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்க: அமைச்சர் அறிவிப்பு
அண்டை மாநிலமான கேரளாவை பாதித்து வரும் இந்த தக்காளி காய்ச்சல், தமிழ்நாட்டை பாதிக்காத வகையில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
குறுவை தொகுப்பு திட்டத்திற்கு முழு மானியத்துடன் உரம்!
தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய நலத்திட்டம்: இன்றே விண்ணப்பியுங்கள்!
Share your comments