போலியாக வரும் குறுஞ்செய்திகளை தவிர்க்கவும் என, பொது மக்களை, தமிழக மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்களின் தொடர்பு எண்களுக்கு போலியான பல குறுஞ்செய்திகள் வருவதனால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இதனைத் தடுக்கவே மின்வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போலி குறுஞ்செய்தி (Fake Message)
தமிழகத்தில் பலரின் மொபைல் போன் எண்களுக்கு, 'முந்தைய மாத மின் கட்டணத்தை செலுத்தாததால், இன்று இரவு முதல் மின் விநியோகம் துண்டிக்கப்படும்; 'உடனே மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்' என்று, போலியான தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணில் பணத்தை செலுத்தி, சிலர் ஏமாந்தும் உள்ளனர்.
போலியாக அனுப்பப்படும் தகவலை நம்பக் கூடாது என, மின் வாரியம் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் வெளியூர் சென்றிருக்கும் சிலர், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் காரணமாக, போலி மொபைல் எண்களில் மின் கட்டணத்தை செலுத்தி ஏமாறுவதாக தெரிகிறது.
இதையடுத்து 'தாங்கள் மின் கட்டணம் செலுத்தாததால் மின் தடை செய்யப்படும் என்று தங்களின் வங்கி விபரம் கேட்டு அல்லது ஏதேனும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு வரும் போலியான குறுஞ்செய்திகளை தவிர்க்கவும்.
'மின்னகம் மையத்தை, 94987 94987 எண்ணில் தொடர்பு கொள்ளவும்' என, மின் வாரியம் மீண்டும் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க
ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்: ரூ. 60 லட்சம் ரிட்டர்ன்!
மீன் ஏற்றுமதியில் இந்தியா கலக்கல்: ஒரே ஆண்டில் இப்படி ஒரு வளர்ச்சியா.!
Share your comments