Dramatically low gold prices!
தங்கம் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. தங்கத்தின் விலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறைவு ஏற்பட்டுக் கொண்டே வந்தாலும் இடையில் ஏற்றம் காணப்பட்டது. ஆனால் இன்று விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலையினை இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி, தங்கத்தில் முதலீடுகளை மாற்றிக் கொண்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
மேலும் படிக்க: TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!
இந்நிலையில், தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக அதன் மீதான சுங்க வரியினை 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வரி உயர்த்தப்பட்டதால் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்து வந்தது என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.
மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி இடஒதுக்கீடு சர்ச்சை!
அதன்படி இந்த மாதத்தின் (ஜூலை) முதல் நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிரடியாக ஏற்றம் கண்டது. அந்த நிலையில் அன்றைய நாளில் ஒரு சவரன் ஆபரண தங்கம், 38,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒருகிராம் 4,785 ரூபாய்க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்து வந்தது.
மேலும் படிக்க: இன்றைய செய்திகள்: தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
கடந்த திங்கட்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ரூ.4,810க்கு விற்பனையானது. சவரனுக்கு144 ரூபாய் உயர்ந்து 38,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 38,440 ரூபாய் எனும் விலையில் இருந்தது. அதன்படி கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து ரூ.4,805க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: முக்கிய செய்திகள்: ஆடு, மாடுகளின் வெப்பத்தைக் கண்டறியும் செயலி அறிமுகம்!
இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு 520 ரூபாய் அதிரடியாகக் குறைந்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 38 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் சரிவடைந்து 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராம் தங்கம் 65 ரூபாய் குறைந்து ரூ. 4,740க்கு விற்பனை செய்யப்படுகின்றது. எனவே, தங்கம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் விலை குறையும் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
Share your comments