1. செய்திகள்

பருவம் தவறி பெய்த கனமழையால், அறுவடைக்குத் தயாரான 10,000 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது! விவசாயிகள் வேதனை

KJ Staff
KJ Staff
Paddy Crops Damaged
Credit : Dinakaran

நாகை மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடி (Cultivation) நடந்தது. இதில் புரெவி புயல் (Burevi Storm) காரணமாக 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சேதமடைந்தது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரமுடியாத நிலையில் கடைமடை விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

நெற்பயிர்கள் சேதம்:

கடந்த சில தினங்களாக நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாகை, செல்லூர், பாலையூர், ஐவனல்லூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் (Paddy crops) சாய்ந்து நாசமாகி உள்ளது. இதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப, தைபொங்கல் அன்று புது அரிசியில் பொங்கலிட்டு கொண்டாடலாம் என்று எண்ணியிருந்த விவசாயிகளுக்கு பயிர்கள் சாய்ந்தது ஏமாற்றத்தையும், பெரும் இழப்பையும் (Heavy loss) ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் கோரிக்கை:

மத்திய, மாநில அரசுகள் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னதாக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு (Compensation) வழங்க வேண்டும். ஏற்கனவே பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு மீண்டும் சோதனையாக பருவம் தவறி மழை பெய்து வருகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் நிவாரண தொகையை விரைவில் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு உழவு, நடவு, உரம் உள்ளிட்ட இருபொருட்களுக்காக (inputs) ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஒரு மாதத்தில் அறுவடைக்கு (Harvest) தயாராக உள்ள நிலையில் பருவம் தவறி மழை பெய்து வருகிறது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி வைக்கோலுக்கு கூட பயன்படாது என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க 100-வது கிசான் விவசாயிகள் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பூச்சி / நோய்த் தாக்குதலால் சின்ன வெங்காயத்தின் விலையில் பெரும் தாக்கங்கள்!

English Summary: Due to the heavy rains that missed the season, 10,000 acres of paddy ready for harvest fell! Farmers suffer Published on: 01 January 2021, 10:26 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.