பாசன தேவை பூர்த்தியாகி உள்ளதால், தமிழகத்தில் வேளாண் பயிர்கள் சாகுபடி பரப்பு, 10.3 லட்சம் ஏக்கராக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அண்டை மாநிலங்களில் இருந்தும் நீர்வரத்து கிடைத்து வருகிறது. இதனால், பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளன. அவற்றில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் மட்டமும் பல மாவட்டங்களில் உயர்ந்துள்ளது. எனவே, பாசன பற்றாக்குறை தீர்ந்துள்ளதால், விவசாயிகள் சாகுபடி பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
சாகுபடி பரப்பு (Cultivation Area)
தற்போதைய குறுவை சாகுபடி பருவத்தில், 4.36 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சிறுதானியங்கள் 1.78 லட்சம் ஏக்கர், பருப்பு வகைகள் 99 ஆயிரம் ஏக்கர், கரும்பு சாகுபடி 95 ஆயிரம் ஏக்கர், எண்ணெய் வித்துக்கள் 2.13 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. மொத்தமாக 10.36 லட்சம் ஏக்கரில், வேளாண் பயிர்கள் சாகுபடி களைகட்டி வருகிறது.
கடந்தாண்டு, இதே காலகட்டத்தில், 10.31 லட்சம் ஏக்கரில், வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன. தற்போது, அதைவிட சற்று கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. விரைவில், சம்பா பருவ நெல் சாகுபடி காலம் தொடங்கவுள்ளது
அப்போது, மற்ற பயிர்களின் சாகுபடியும் அதிகரிக்கும் என்பதால், அரசின் உணவுப் பொருட்கள் உற்பத்தி இலக்கை பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில், வேளாண் துறையினர் உள்ளனர்.
மேலும் படிக்க
Share your comments