ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் தாளவாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், பெங்களூரு, கர்நாடகா ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து 8,000 பெட்டிகள் தக்காளி வரத்தாகி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் வரத்து குறைந்துள்ளது. அதேபோல, கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் மழை தீவிரமாக பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
தக்காளி விலை (Tomato Price)
இதுபோன்ற காரணங்களால் தக்காளி வரத்து சரியத் தொடங்கியுள்ளது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்துள்ளது. இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திராவிலிருந்து மட்டும் 5,000 தக்காளி பெட்டிகள் வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 10 முதல் 15 வரை விற்பனையாகியது. இந்த வாரம் வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையாகிறது.
அடுத்து வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். தக்காளி விலை உயர்வு வியாபாரிகளுக்கு லாபத்தைத் தந்தாலும் பொதுமக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Share your comments