Tomato price are high
தொடர் மழையால் (Continuous Rain) வரத்து குறைந்து தக்காளி ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆனது.
தொடர் மழை
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தாளவாடி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த வாரம் 14 கிலோ கொண்ட சிறிய தக்காளி பெட்டி ரூ.600-க்கும், 25 கிலோ கொண்ட பெரிய தக்காளி பெட்டி ரூ.850-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி விலை உயர்வு
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. நேற்று 14 கிலோ கொண்ட சிறிய தக்காளி பெட்டி ரூ.850 முதல் ரூ.900 வரையும், 25 கிலோ கொண்ட பெரிய பெட்டி ரூ.1,500 முதல், ரூ.1,600 வரையும் விற்பனை ஆனது.
இதேபோல் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் மளிகை கடைகளில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மழை குறைந்தால் தக்காளி விளைச்சல் அதிகரித்து விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க
Share your comments