இரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான, நீலகிரி தேயிலைத் துாள் வர்த்தகம் தேக்கம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், வாரம்தோறும் தேயிலைத் துாள் ஏலம் விடப்படுகிறது. இங்கு நேரடியாகவும், 'ஆன்லைன்' வாயிலாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி (Export) செய்யப்படுகிறது.
தேயிலை வர்த்தகம் பாதிப்பு (Impact on the tea trade)
கடந்த, 50 ஆண்டுகளாக நீலகிரி தேயிலையை ரஷ்யா அதிகளவில் இறக்குமதி செய்கிறது. தற்போது, ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, நீலகிரி தேயிலை வர்த்தகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம், குன்னுாரில் நடந்த ஏலத்தில், 32 சதவீதம் விற்பனையாகாததால், 4 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை துாள் தேக்கம் அடைந்துள்ளது.
இரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வந்தாலீ தான், தேயிலைகளை இரஷ்ய நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். மேலும், தேயிலைத் தேக்கத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
தேயிலைத் தேக்கத்தால், அங்கு கூலி வேலை செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரஷ்யா - உக்ரைன் போர் விரைவாக முடிந்தால் மட்டுமே, இங்கு சகஜ நிலை திரும்பும் என்று தேயிலைத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க
பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
ரஷ்யா - உக்ரைன் போர்: பிரதமர் மோடி தலையிட வேண்டும் - உக்ரைன் தூதரகம் வேண்டுகோள்!
Share your comments