1. செய்திகள்

சமையல் எண்ணெய் விலை: முதல் முறையாக வீழ்ச்சி, காரணம் என்ன?

Deiva Bindhiya
Deiva Bindhiya
Edible oil prices plummet for the first time, what is the reason?

சமையல் எண்ணெய்களின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. ஆம், உணவுத் துறை செயலர் சுதன்ஷு பாண்டே, வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிம்மதியான செய்தி உள்ளது. 

பல முக்கிய சமையல் எண்ணெய் நிறுவனங்கள், அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து தங்கள் தயாரிப்புகளின் அதிகபட்ச சில்லறை விலையில் அதாவது (MRP) சுமார் 15-20% வரை குறைத்துள்ளன.

சமையல் எண்ணெய் பற்றாக்குறை(Edible oil shortage)

உணவுத் துறை செயலர், பாண்டே, “சமையல் எண்ணெய் விலைகள் சில காலமாக கவலையளிக்கின்றன, அரசின் மிகவும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் மற்றும் எண்ணெய் தொழில்துறையுடனான சந்திப்புகளுக்குப் பிறகு, மிகவும் தீவிரமான மற்றும் குறிப்பிடத்தக்க குறைப்பு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இந்தத் தொழில்களின் எண்ணெய்களில் வீழ்ச்சி (Fall in the oils of these industries)

ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் பல்வேறு எண்ணெய்களின் சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.14 முதல் ரூ.30 வரை குறைத்துள்ளது. Bunge India விலையை ₹10 முதல் ₹20 வரை குறைத்துள்ளது. ஃபார்ச்சூன் பிராண்டை விற்பனை செய்யும் அதானி வில்மர், எண்ணெய் விலையை ரூ.40 வரையும், IFFCO Allana ரூ.35 வரையும் குறைத்துள்ளது.

பூஜ்ஜிய கட்டணம் (Zero Charge Duty)

மேலும் உணவுத்துறை செயலர், "நீங்கள் ஏறக்குறைய 60% இறக்குமதி கூறுகளைச் சார்ந்திருக்கும் போது, ​​உள்நாட்டு விலைகள் இயற்கையாகவே சர்வதேச விலைகளால் பாதிக்கப்படுகின்றன. இந்திய அரசு சமையல் எண்ணெய்களின் விஷயத்தில் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக மாற்றவே முயற்சித்தது. எண்ணெய் பிராண்டுகள் முழுவதும் விலைகளில் குறிப்பிடத்தக்க குறைப்பைக் கொடுத்துள்ளது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எத்தனை டாலர் வித்தியாசம் (How many dollars difference)

வரலாற்றில் முதன்முறையாக, பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற எண்ணெய்களின் சர்வதேச விலை டன் ஒன்றுக்கு சுமார் $1,300 என்ற அளவில் உள்ளது. பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பிற எண்ணெய்களின் விலைகளுக்கு இடையே சுமார் $300-400 வித்தியாசம் இருந்தது.

மற்ற பொருட்களும் இழப்பு விகிதங்கள் (Loss rates for other items)

இந்த நேரத்தில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் சீராக உள்ளதோடு, வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

PM Kisan Samman Nidhi: 10வது தவனை இவர்களுக்கு கிடைக்காது

வந்தாச்சு சலுகை விலையில் ஆவின் பால் அட்டை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

English Summary: Edible oil prices plummet for the first time, what is the reason? Published on: 01 January 2022, 03:52 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.