1. செய்திகள்

ரூ.5 ஆக குறைந்த முட்டை விலை! காரணம் என்ன?

Deiva Bindhiya
Deiva Bindhiya
Egg price as low as Rs 5! What is the reason?

முட்டையின் விலையில் ஒவ்வொரு நாளும் மாற்றம் வர வாய்ப்புகள் உள்ளது. முட்டையின் விலையில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டங்கள் வேறுபட்டவை. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் முட்டையின் விலை மாறுபட வாய்ப்புள்ளது. மேலும், முட்டை மொத்த சந்தையில் இருந்து மொத்த விற்பனை வரையிலும் ஒரு விலையும், சில்லறை விற்பனைக் கடைகள் வரையிலும் ஒரு விலையும் இருக்கும், இதை நம்மால் மாற்ற முடியாது. 

முட்டை விலையானது NECC (National Egg Coordination Committee) மற்றும் உற்பத்தியாளர்களால் கையிருப்பு, வரத்து, முட்டை சந்தையின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், முட்டையின் விலையில் நிர்ணய விலை இல்லை. மாநிலம், புவியியல் இருப்பிடம், கிடைக்கும் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் ஷாப்பிங் மால்கள்/ சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு, இடையே விலை வித்தியாசம் இருந்து வருகின்றன.

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5.05 ரூபாயில் இருந்து 4.95 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டது. இன்று சென்னையில் முட்டையின் விலை ரூ.5-க்கு விற்பனையாகிறது.

முட்டை அத்தியாவசை தேவையில் ஒன்றாகும், தங்கத்தின் விலைப்போல் இதன் விலையிலும் மாற்றம் இருந்து வருவது சற்று சிரமமாக இருந்தாலும், இதை மக்கள் எதிர்க்கொள்கின்றனர். இந்நிலையில் இன்று நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.05 லிருந்து ரூ.4.95 ஆக நிர்ணயமாகி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது. நாளை மீண்டும் முட்டையின் விலையில் மாற்றம் வரலாம், எனவே இன்று நினைத்து மகிழ்ச்சியடைந்திடுவோம்.

நாம் நன்கு அறிவோம், இந்தியாவில் முட்டை உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி இல்லை, எனவே அனைத்து வகையான முட்டைகளுக்கும் GST விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முட்டையின் விலையில் மாற்றம் வந்துள்ளது, மேலும் மாற்றங்கள் வரவும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க:

முட்டை விலை 2 ரூபாய் அதிகரிக்கலாம்! எப்போது, ஏன்?

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி!

English Summary: Egg price as low as Rs 5! What is the reason? Published on: 20 December 2021, 10:58 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.