1. செய்திகள்

அசத்தும் விலையில் மின்சார ஸ்கூட்டர்கள், ரூ.50000...

Deiva Bindhiya
Deiva Bindhiya
Electric scooters at exorbitant prices, Rs. 50,000…

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலையுடன் போட்டி போட (Electric Scooter) அதாவது மின்சார வாகனங்களை தேர்வு செய்யலாம். அதிகரித்து வரும் சுற்று சூழல் பிரச்சனைக்கும், இது மிகச் சிறந்த தீர்வாகும்.

மின்சார ஸ்கூட்டர்களின் (Electric Scooter) இயங்கும் செலவு (Running cost), பெட்ரோலால் இயங்கும் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். மின்சார வாகனங்களை பயன்படுத்துவதால், வாகன ஓட்டிகள், பெட்ரோலுக்குச் செலவிடும் பணத்தை தரளமாக மிச்சப்படுத்தலாம். 

ஆனால், பொதுவாக மின்சார ஸ்கூட்டர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால், மக்கள் அவற்றை வாங்க தயங்குகின்றனர். இந் நிலையில், சந்தையில் உள்ள மலிவான, மற்றும் திறன் மிக்க மின்சார ஸ்கூட்டர்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு இருக்க வாகன ஒட்டிகளுக்கான குட் நியூஸ், 50000 ரூபாய்க்கு குறைவான விலையில், நீங்கள் வாங்கக் கூடிய சில சிறந்த மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள். 

ஹீரோ எலக்ட்ரிக் ஃபிளாஷ் (Hero Electric Flash): Hero Electric Flash-ன் ஆரம்ப விலை 46,640 ரூபாய் ஆகும். இதன் விலை அதிகபட்சமாக சில இடங்களில் 59,640 ரூபாய் ஆக உள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த மின்சார ஸ்கூட்டரில் 250W மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக் டேஷ் (Hero Electric Dash): ஹீரோ எலக்ட்ரிக் டேஷின் ஆரம்ப விலை 50 ஆயிரம் ரூபாயாகும். இதன் விலை அதிகபட்சமாக சில இடங்களில் ரூ.62,000 ஆகவும் உள்ளது. இந்த மின்சார வாகனம் மூன்று வகைகளில் காண முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 60 கிமீ தூரம் பயணிக்கும். இதில் 250W மோட்டார் இருப்பது குறிப்பிடதக்கது. இதுவும் லித்தியம் - அயன் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆம்பியர் மேக்னஸ் (Ampere Magnus): ஆம்பியர் மேக்னஸின் ஆரம்ப விலை ரூ.49,999 ஆக விற்கப்படுகிறது. இதன் விலை அதிகபட்சமாக ஒரு சில இடங்களில் ரூ.76,800 வரை இருப்பதும் குறிப்பிடதக்கது. இது 84 கிமீ (Riding Range) தருகிறது. இந்த மின்சார ஸ்கூட்டரின் எடை 82 கிலோ ஆகும். இதில் லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் 50 கி.மீ ஆகும்.

அவான் இ ஸ்கூட் (Avon E Scoot): Avon E ஸ்கூட்டரின் ஆரம்ப விலை சுமார் 45 ஆயிரம் ரூபாயாகும். இது 65 கிமீ Riding Range கொண்டது. இது 215W மோட்டார் மற்றும் VRLA வகை பேட்டரியைக் கொண்டிருப்பது சிறப்பாகும்.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1 (Bounce Infinity E1): மாற்றக்கூடிய பேட்டரி ஆப்ஷனுடன், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார ஸ்கூட்டர் இது என்பது குறிப்பிடதக்கது. பவுன்ஸ் இன்ஃபினிட்டிய்யின் (Bounce Infinity) இதன் ஆரம்ப விலையும் 50 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. இதன் ரைடிங் ரெஞ் 85 கிமீ ஆகும். இதில் 1500W மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது. Bounce Infinity E1 இன் அதிகபட்ச வேகம் 65kmph ஆகும்.

இவ்வாறு மின்சார ஸ்கூடர்களும் மலிவான விலையில் கிடைக்கின்றன, சுற்று சுழல் பாதுகாக்க பெட்ரோல் விலையுடன் போட்டி போட பல விசயங்களில் இவை உபயோகமாக இருக்கும்.

பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1 (Bounce Infinity E1): மாற்றக்கூடிய பேட்டரி ஆப்ஷனுடன், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார ஸ்கூட்டர் இது என்பது குறிப்பிடதக்கது. பவுன்ஸ் இன்ஃபினிட்டிய்யின் (Bounce Infinity) இதன் ஆரம்ப விலையும் 50 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. இதன் ரைடிங் ரெஞ் 85 கிமீ ஆகும். இதில் 1500W மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது. Bounce Infinity E1 இன் அதிகபட்ச வேகம் 65kmph ஆகும்.

இவ்வாறு மின்சார ஸ்கூடர்களும் மலிவான விலையில் கிடைக்கின்றன, சுற்று சுழல் பாதுகாக்க பெட்ரோல் விலையுடன் போட்டி போட பல விசயங்களில் இவை உபயோகமாக இருக்கும்.

மேலும் படிக்க:

Atmanirbhar: ரூ.11,040 கோடி செலவில், ஆயில் பாம் மிஷன்

RBI-இன் புதிய விதிகள் அமல்! சாமானியர்களுக்கு பாதிப்பா?

English Summary: Electric scooters at exorbitant prices, Rs. 50,000… Published on: 29 December 2021, 02:49 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.