தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள பதனவாடிகாப்புக்காடு பகுதியில் ஒற்றைக் காட்டு யானை (Elephant) கடந்த இரு வாரங்களாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வந்தது. பொதுமக்கள் யானையைக் காட்டுக்குள் விரட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
யானை பிடிபட்டது
இன்று (ஏப்.7) தர்மபுரி மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜ்குமார் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியினை மேற்கொண்டனர். வனத்துறையினர்அதனைத் தொடர்ந்து யானையை அடையாளம் கண்டபின், மருத்துவர் பிரகாஷ் வெற்றிகரமாக அதற்கு மயக்க ஊசியைச் (Injection) செலுத்தினார். யானை மயங்கிய உடன் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் விடும் பணியில் தர்மபுரி மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
யானைக்கு முதலுதவி
விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர். பிடிபட்ட யானையை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவதற்கு முதலுதவி (First-Aid) தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. யானை பிடிபட்டதால், வனப்பகுதியை சுற்றியிருந்த கிராம் மக்களும், விவசாயிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வனவிலங்குகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த வனத்துறை! பலாக்காய்கள் வெட்டி அகற்றம்
கேஸ் சிலிண்டர் சலுகை! ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்!
Share your comments