1. செய்திகள்

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan

IT Jobs for Students

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கவும் தமிழக அரசு சார்பாக நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு தரப்பிலிருந்து நிறைய வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு நிறையப் பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு (Employment)

இத்திட்டத்தின் கீழ், 2021-22ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, HCL நிறுவனம் பயிற்சியோடு பணி வாய்ப்புகளை வழங்குகின்றது. தமிழக அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக அரசுப் பள்ளி மாணவர்கள் 2,000 நபர்களுக்கு HCL Techbee Early Career Program-க்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகின்றது. இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பயிற்சியோடு HCL Technologies நிறுவனத்தில் முழுநேர பணிவாய்ப்பு கிடைக்கும்.

Internship பயிற்சியின் போது 7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூ.10,000 உதவித் தொகையைப் பெறலாம். பணியில் சேர்ந்தவுடனேயே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ.1.70 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரை HCL Technologies நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியை துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் வாய்ப்பைப் பெறலாம். மேலும் அவர்களின் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை HCL Technologies நிறுவனம் வழங்குகின்றது. இத்திட்டமானது மாணவர்கள் சிறுவயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கிறது.

மாநிலம் முழுவதிலும் இந்த HCL “Techbee”திட்டத்தின் தேர்வு முகாமினை அக்டோபர் 28 முதல் 30ஆம் தேதி வரை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு தகுதியுள்ள மாணவர்களைத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க

பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: அமைச்சரின் சூப்பரான அறிவிப்பு!

1000 ரூபாய் போதும்: கல்லூரி மாணவர்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்!

English Summary: Employment for Educated Youth: Super Notification of Tamil Nadu Government!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.