1. செய்திகள்

TNPL- இல் பட்டதாரிகளுக்கு வேலைவாயப்பு? விண்ணப்ப விவரம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Employment for graduates in TNPL? Application Details

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனமான டி.என்.பி. எல்லில் 84 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் படித்து முடித்தவர்கள், இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1 ஆம் தேதியின்படி 30 வயதுக்கு மிகாமல் விண்ணப்பதாரர்கள் இருத்தல் வேண்டும்.

மெக்கானிக்கல், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. முன் அனுபவம் வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் விவரம் (Vacancy Details)

  • கெமிக்கல் - 41
  • மெக்கானிக்கல் - 21
  • இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 10
  • எலக்ட்ரீசியன் - 12

இவ்வாறு 84 பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊதிய விவரம் (Wage details)

43,000 ரூபாய் முதல் 51 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் இருக்கும். பணியிடம் மற்றும் கிரேடுக்கு ஏற்ப ஊதியங்கள் மாறுபடும் என்பதும் குறிப்பிடதக்கது.

வயது வரம்பு (Age limit)

1.01.2022 ஆம் தேதியின் படி விண்ணப்பதாரர் 30 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

அனுபவம் பற்றிய விவரம் (Experience Details)

5 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் இருக்க வேண்டும், எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி விவரம் (Educational Qualification)

விண்ணபிக்கும் துறையில் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ படித்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் (Last day to apply)

ஜனவரி 20 தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும், எனவே அதற்கு முன்பே விண்ணப்பிப்பது அவசியம்.

தேர்வு முறை

நேர்முகத்தேர்வு முலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி (Address to apply)

GENERAL MANAGER-HR
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
TNPL UNIT-II, MONDIPATTI, K.PERIYAPATTI (POST),
MANAPPARAI (TK), TRICHY DISTRICT-621306

மேலும் விபரங்களுக்கு - TNPL -ன் அதிகாரப்பூர்வ இணையத்தில் பார்வையிடவும்.

மேலும் படிக்க:

குடியரசு தின கொண்டாட்டத்தில் மாற்றம், புதிய ஏற்பாடு. காரணம் என்ன?

ஜல்லிக்கட்டில் முறைகேடாக களமிறங்கிய வீரர்கள், உரிமையாளர் மீது சீரிய காளை!

English Summary: Employment for graduates in TNPL? Application Details Published on: 15 January 2022, 05:08 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.