தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை வரும் 14ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு (Increase in student enrollment)
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டப் பல பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர்.
5 லட்சம் மாணவர்கள் (5 lakh students)
இதனால் சுமார் 5 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு கூடுதலாச் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா 2-ம் அலை தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் (Corona virus)
இதன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதோடு அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தடைப்பட்டது.
மாணவர் சேர்க்கை (Student Admission)
இந்த நிலையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வருகிற 14-ந் தேதி முதல் தொடங்குவதற்கான நடைமுறைகளைப் பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள் 14-ந் தேதி பள்ளியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் கூறியதாவது:-
ஆயத்தப் பணிகள் (Preparatory work)
கொரோனா தொற்றின் காரணமாக மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறவில்லை. பாதிப்புக்குப் பிறகு வருகிற 14-ந் தேதி முதல் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஆயத்த பணிகளை செய்ய வேண்டும்.
பள்ளிக்கு வருகை (Attendance at school)
அதற்காக தலைமை ஆசிரியர், நிர்வாக ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் வர வேண்டும் (Teachers should come)
21-ந் தேதியில் இருந்து பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், மற்ற வகுப்புகளுக்கும் மாணவர்களைச் சேர்ப்பதற்கும், சத்துணவு சாப்பிடக்கூடிய மாணவர்களுக்கு அதற்கான உணவு பொருட்களை வழங்கவும், பள்ளிக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டிற்கே சென்று (Go home)
கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க கல்வித்துறைத் திட்டமிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு வீடு வீடாகச் சென்று எடுத்துரைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
நெற்பயிர்களைத் தாக்கும் கருப்பு நாவாய் பூச்சி! கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு
Share your comments