1. செய்திகள்

சுயவேலைவாய்ப்பு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்: ஸ்டாலின் அறிவுறுத்தல்!

R. Balakrishnan
R. Balakrishnan
MK Stalin
Credit : Dinamalar

படித்த இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களை (Self Employment Scheme) விரிவுப்படுத்த வேண்டும் என சிறு-குறு தொழில் துறை அமைச்சகத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) அறிவுறுத்தியுள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர், படித்த இளைஞர்களை தொழில்முனைவோர்களாக (Entrepreneurs) உருவாக்குவதற்காக செயல்படுத்தப்படும் சுயவேலைவாய்ப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உறுதிப்படக் கூறியிருக்கிறார்.

இதேபோல் தமிழகத்தில் தொழில்வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளை விரைந்து ஆராய்ந்து அங்கு தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் என அந்த ஆய்வுக் கூட்டத்தில் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சிட்கோவில் (SIDCO) நிலுவையில் உள்ள மனை ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை சுணக்கமின்றி முடிக்க வேண்டும் என அதிகாரிகளை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முறைசார்ந்த கடன்

இதனிடையே சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முறைசார்ந்த கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த தொழில் புத்தாக்க மாநிலமாக உருவாக்க உழைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.

இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கிட சுயவேலைவாய்ப்பு திட்டங்களை விரிவுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியிருப்பது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க

தமிழகத்தில் பொதுவான தளர்வுகள் இன்று முதல் அமல்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடு நீங்கியது!

மண் வளத்தை மேம்படுத்தும் புதிய மண் நுண்ணுயிரி நீலகிரியில் கண்டுபிடிப்பு!

English Summary: Expanding self-employment programs: Stalin's instruction! Published on: 06 July 2021, 10:36 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.