முழு ஊரடங்குக்கு நல்ல பலன் கிடைக்கத் துவங்கியிருப்பதாகவும், தேவைப்பட்டால், முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொற்றுப்பரவல் (Infectious)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கிடுகிடுவென அதிகரித்து வந்தது. இதைத்தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, முழு ஊரடங்கு, உள்ளிட்டத் தடுப்பு நடவடிக்கைகள், போர்க்கால அடிப்படையில் முடுக்கி விடப்பட்டன. எனினும் தொற்றுப்பரவல் குறைந்தபாடில்லை.
31ம்தேதி முடிகிறது (Ends on the 31st)
இதையடுத்துத் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்துப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 31ம் தேதி முடிவடைகிறது.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் நேமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
நல்ல பலன் (Good benefit)
அப்போது, முழு ஊரடங்கால் பலன் கிடைக்கத் துவங்கி உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளன. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் முழு பலனைத் தரும் என்று நம்பிக்கை உள்ளது. ஊரடங்கை மதித்து மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.
2.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி (Vaccinated 2.24 lakh people)
தமிழகத்தில் தினமும் 78 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. நேற்று இதுவரை இல்லாத அளவாக 2.24 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் தடுப்பூசி வீணாவது 6-ல் இருந்து ஒரு சதவீதமாகக் குறைந்து போர்க்கால அடிப்படையில் தடுப்பூசிப் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
மக்கள் இயக்கம் (People's Movement)
தடுப்பூசி இயக்கம், மக்கள் இயக்கமாக மாற்றப்படும். பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்திக் கெஞ்சிக் கேட்டு கொள்கிறேன்.
வாய்ப்பு உள்ளோர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். மக்களைக் காப்பதில் தடுப்பூசியின் பங்கு அதிகம் உள்ளது.
கையிருப்பில் தடுப்பூசிகள் (Vaccines in stock)
மத்திய அரசுக் கூடுதலாகத் தடுப்பூசி வழங்க வேண்டும். 44 வயதுக்கு உட்பட்டோருக்குத் தடுப்பூசி போட 3.14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
விரைவில் தடுப்பூசித் தயாரிப்பு (Vaccine preparation soon)
தமிழகத்தில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசித் தயாரிக்கும் பணியை துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தடுப்பூசிக்காக சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டு உள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை (There is no lack of oxygen)
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளோம். கோவையில், கொரோனா பரவலைக் குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? (Will the curfew be extended?)
முழு ஊரடங்கு காரணமாகச், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் படிப்படியாக பாதிப்புக் குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பை பொறுத்துத் தேவைப்பட்டால், முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க...
மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!
மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பான இடத்திற்கு நெல் மூட்டைகளை இடமாற்றம் செய்ய கோரிக்கை!
விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நடமாடும் வேளாண் இடுபொருட்கள் விற்பனை வாகனம்
Share your comments