ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என பல மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதற்காக பல மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஆதார் எண்ணுடன் ரேசன் கார்டை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ரேசன் கார்டு (Ration card)
இந்திய குடிமகனின் மிக முக்கிய அடையாள அட்டையாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. நாட்டில் நடைபெறும் பல மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு, அனைவரும் கட்டாயமாக ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேசன் கார்டு மற்றும் வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. இது மட்டுமின்றி, ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், தற்போது வரைக்கும் பல ரேசன் கார்டுகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலேயே இருக்கிறது. இந்த நிலையில் ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்களின் ரேசன் கார்டுகளுக்கு, ரேசன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்றும், ரேசன் கார்டு ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது
கால அவகாசம் நீட்டிப்பு
தற்போது ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களின் ரேசன் கார்டுகளை ஆதார் கார்டு உடன் இணைத்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
அரசுப் பணியாளர்கள் உடனே இதைச் செய்ய வேண்டும்: பென்சன் திட்டத்தில் கட்டுப்பாடு!
வீட்டில் இருந்து கொண்டே புதிய ரேசன் கார்டை வாங்கலாம்: எப்படித் தெரியுமா?
Share your comments