பொதுமக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200ரூபாயும், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு 500 ரூபாயும், அபராதமாக விதிக்கப்படும் எனத் தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
புதியக் கட்டுப்பாடுகள் (New restrictions)
கொரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகமாக பரவி வருவதையடுத்து தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் இது அமலுக்கு வந்துள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தற்போது கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை அதிகரித்து வருவதால், தொற்றுப் பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அபராதம் விதிப்பு (Imposition of fines)
இதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறினால் அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
-
கொரோனா நிபந்தனைகளை கடைபிடிக்காவிட்டால் அவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் (Fine) விதிக்கப்படும்.
-
முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 செலுத்த வேண்டும். முக கவசத்தை வாய் மற்றும் மூக்கு மூடி இருக்கும் வகையில் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
-
பொது இடத்தில் எச்சில் (Split) துப்பினால் ரூ.500 அபராதம் (Fine) விதிக்கப்படும்.
-
பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளி (Social Distance) கடைபிடிக்க வேண்டும்.
-
அதை மீறுபவர்கள் ரூ.500 அபராதம் (Fine) செலுத்த வேண்டும்.
-
சலூன்கள், அழகு நிலையங்கள்,“ஜிம்”கள் (GYM), வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
-
நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் விதிமுறைகளை மீறும் தனி நபர்களுக்கு ரூ.500-மும், வாகனம் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும்.
மேலும் கொரோனா விதிமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது குறித்த வழிமுறைகள்-
-
அனைவரும் முகக்கவசம் (Mask) அணிந்திருக்க வேண்டும்.
-
குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியை எப்போதும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
-
அனைத்து பணியாளர்களுக்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், மல்டிவிட்டமின் மாத்திரை, ஜிங்க் மாத்திரை போன்றவை நிறுவன உரிமையாளர்களால் (companies) வழங்கப்பட வேண்டும்.
-
கடைகள், வணிக வளாகங்கள், அலுவலக பணியிடங்களில் இருக்கும் கதவு கைப்பிடிகள், லிப்ட் பொத்தான்கள், மேஜை நாற்காலிகள், கழிவறை சாதனங்கள் போன்றவற்றிலும் அலுவலக வளாகம், பொது இடங்களிலும் அடிக்கடி கிருமி நாசினி (Sanitizers) தெளிக்க வேண்டும்.
-
வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவற்றின் முகப்பு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் (Thermal Scanner) மூலம் வெப்ப பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
-
பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பயன்படுத்தும் முக கவசம், கையுறை போன்றவற்றை உரிய முறையில் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கொரோனாத் தடுப்பு வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கவும்- தமிழக ஆளுநர் வேண்டுகோள்!
கொரோனா 2வது அலை : தமிழகத்தில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பொது முடக்கம் அறிவிப்பு!
தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!
Share your comments