கிசான் உர்ஜா சுரக்ஷா எவம் உத்தன் மகாபியன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தவேண்டாம் என்றும் போலி இணையதளங்கள் குறித்து விழுப்புடன் இருக்கும் படி மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், நீர்ப்பாசனத்திற்கான ஆதாரங்களை வழங்குவதற்கும் மத்திய அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதமர் கிசான் உர்ஜா சுரக்ஷா எவம் உத்தான் மகாபியான் (PM-KUSUM Yojana) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போலி இணையதளங்கள்
இந்நிலையில், பிரதமர் கிசான் உர்ஜா சுரக்ஷா எவம் உத்தான் மகாபியான் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதாகக் கூறிக்கொள்ளும் மோசடி இணையதளங்களுக்கு எதிராக புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் (எம்என்ஆர்இ)அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பல போலி வலைத்தளங்கள் விண்ணப்பதாரர்களிடமோ அல்லது விவசாயிகளிடமோ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிவு கட்டணத்தை பிரதான் மந்திரி-குசூம் யோஜனா என்ற பெயரில் பம்பின் விலையுடன் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றன. இந்த மோசடி வலைத்தளங்கள் விவசாயிகளை ஆன்லைனில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றன. இந்த போலி வலைத்தளங்கள் www.kusumyojanaonline.in.net, www.pmkisankusumyojana.co.in, www.onlinekusamyojana.org.in, www.pmkisankusumyojana. com என்ற பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விவசாயிகள் கவணமுடன் இருக்கவேண்டும்
எனவே, பிரதான் மந்திரி-குசும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளும் மோசடி வலைத்தளங்களை பார்வையிட வேண்டாம் என்றும் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த திட்டம் பிரதான் மந்திரி-குசூம் திட்டம் பல்வேறு மாநில அரசின் துறைகளால் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (எம்.என்.ஆர்.இ) www.mnre.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது 1800-180-3333 கட்டணமில்லா எண்ணை அழைக்கவும்...
Share your comments