1. செய்திகள்

சித்திரை முதல் நாள்; விவசாயம் செழிக்க 'நல்லேர்' பூட்டி உழவு பணியை தொடங்கிய தஞ்சை விவசாயிகள்

Harishanker R P
Harishanker R P

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நல்லேர் பூட்டும் விழா பல கிராமங்களில் நடைபெற்று வருகிறது. தமிழர் பண்பாட்டில் சித்திரை முதல் நாளில் விவசாய பணிகளை தொடங்குவது நல்லதாகவும், மரபாகவும் உள்ளது. அதை 'நல்லேர்' அல்லது 'பொன்னேர் பூட்டும் விழா'வாக கிராமங்களில் ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள்.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாளான தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி நல்லேர் பொன்னேர் பூட்டும் நிகழ்வு காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இந்த ஆண்டு விவசாயம் செழித்து வளம் கொழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. ஆனால் காலப்போக்கில் விவசாயம் பொய்த்து போனதாலும், எந்திரமயமானதாலும் நல்லேர் பூட்டும் நிகழ்வு பல கிராமங்களில் மறைந்து விட்டாலும் இன்னும் ஒரு சில கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று (ஏப்ரல் 14) தஞ்சை மாவட்டத்தில் வேங்கராயன் குடிகாடு, பள்ளியக்ரஹாரம், டவுன் கரம்பை, திருவையாறு, பட்டுகுடி, ராவுசாப்பட்டி, திருக்கானூர்ப்பட்டி, குருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நல்லேர் பூட்டி நடப்பாண்டு சாகுபடிகள் அதிகமாக, எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது என விவசாயிகள் கடவுளை வழிபட்டன

முன்னதாக மாடுகளை குளத்தில் குளிப்பாட்டி , வயலில் இயற்கை உரம், நவதானிய விதைகளை தூவி, வெல்லம் கலந்த பச்சரிசியை கொண்டு சூரிய பகவானுக்கு பூ, பழம், தேங்காய் ஆகியவற்றை படையலிட்டு உழவு மாடுகளை கொண்டு பாரம்பரிய முறைப்படி விவசாயிகள் ஏர்பூட்டி உழவு பணியை தொடங்கினர்.

தஞ்சையை அடுத்த குருங்குளம் பகுதியில் கிராம மக்கள் ஒன்று கூடி ஒரே இடத்தில் நல்லேர் பூட்டுதல் நடைபெற்றது. இதில் மாதம் மும்மாரி மழை பொழிய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், விவசாயிகள் செழுமையாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டிக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து விவசாயி கோவிந்தராஜ் கூறும்போது, "குறுவை, சம்பா சாகுபடி முடிந்ததும் கோடைகாலத்தில் வயல்களில் எந்த சாகுபடி பணிகளும் மேற்கொள்ளாமல், வயலை அப்படியே ஓரிரு மாதங்களுக்கு விட்டு விடுவார்கள். பின்னர் தமிழர்களின் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் பிறந்ததும் நல்ல நாள் பார்த்து அந்த நாளில் தான் வயலில் நல்லேர் பூட்டி பணியை தொடங்குவார்கள். அப்படி தொடங்கினால் அந்த ஆண்டு சாகுபடி எவ்வித இடையூறும் இல்லாமல் மகசூல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.'' என்று அவர் தெரிவித்தார்.

Related links:

மழையும் வெயிலும்! இன்பமும் துன்பமும்! அடுத்த 7 நாட்களுக்கு இதுதான் தமிழகத்தில் நிலை! குடை அவசியம்!

ஊட்டச்சத்து மற்றும் வருகைக்காக ஆண்டுதோறும் 26 லட்சம் MT உணவு தானியங்களை வழங்குவதற்காக, பள்ளி உணவுக்கான பொருள் செலவை அரசு 9.5% உயர்த்தியுள்ளது

English Summary: Farmers begin cultivation in Thanjavur district on the occasion of Chithirai festival

Like this article?

Hey! I am Harishanker R P. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.