மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட அனைத்து மாநில விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டெல்லி எல்லைகளில் விவசாய அமைப்பு தலைவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி (Delhi) நோக்கிப் பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
19வது நாளாக தொடரும் போராட்டம்
டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் இன்று 19-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் போராட்ட களமாகி வருகிறது.
இனி எந்நேரமும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பலாம்! RTGS சேவை முழுநேரமும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம்
போராட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒருநாள் உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கி உள்ளனர். விவசாயிகள் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தையும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதத்தையும் நடத்துவார்கள் என்று விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக விவசாய அமைப்பு ஒன்றின் தலைவரான குர்னம் சிங் சதுனி பேசியதாவது, நாங்கள் அரசாங்கத்தை தட்டி எழுப்ப விரும்புகிறோம். எனவே, எங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் 40 விவசாய சங்க தலைவர்கள் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து எல்லைப் பகுதிகளிலும் உண்ணாவிரத போராட்டத்தில் அமர்வார்கள். அவர்களில் 25 பேர் சிங்கு எல்லையிலும், 10 பேர் டிகிரி எல்லையிலும், 5 பேர் உத்தரபிரதேச எல்லையிலும் அமர்வார்கள் என ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் பொதுச்செயலாளர் ஹரிந்தர் சிங் லாகோவால் கூறி உள்ளார்.
போராட்ட களத்திற்கு வரும் டெல்லி முதல்வர்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தானும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வேன்.. ஆம் ஆத்மி தொண்டர்களும் இதில் கலந்து கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம் அளிக்க ஒரு மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
ஓய்வுகால வருமானத்தைப் பெற மிகச் சிறந்த 5 முதலீட்டு திட்டங்கள்.!
கோடிக்கணக்கில் சம்பாதிக்க எளிய வழி முதலீடு தான்! நிபுணர்கள் கருத்து!
Share your comments