1. செய்திகள்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Farmers Protest
Credit : Daily Thandhi

மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்த 3 வேளாண் சட்டங்களுக்கு (Agri bills) பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ந் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடங்கிய போராட்டம் இன்றோடு ஆறு மாதங்களை எட்டியுள்ளது.

கருப்பு தினம்

போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, இன்று (26 ஆம் தேதி) கருப்பு தினமாக (Black day) அனுசரித்து நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகளின் போராட்ட அழைப்புக்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி உள்பட 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

MK Stalin
Credit : Daily Thandhi

தீர்மானம்

3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) வலியுறுத்தி உள்ளார்.

“விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை, உணர்வுகளை மதித்து சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முன்வரவில்லை. இது தொடர்பாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி செய்யாதது கவலையளிக்கிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். விவசாயிகள் போராட்டம் நடத்தி 6 மாதங்கள் ஆன பின்னரும் தீர்வு ஏற்படவில்லை. விவசாயிகள் நலனுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் (3 Agri Bill's) திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் படிக்க

மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பான இடத்திற்கு நெல் மூட்டைகளை இடமாற்றம் செய்ய கோரிக்கை!

விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் நடமாடும் வேளாண் இடுபொருட்கள் விற்பனை வாகனம்

English Summary: Farmers carry black flags protest against new agricultural laws! Published on: 26 May 2021, 02:13 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.