மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட (Agri Laws) திருத்தங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டில்லியில் கடந்த பல மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீண்டும் போராட்டம்
கோவிட் (Covid) பெருந்தொற்றால், போராட்டம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், தற்போது இயல்பு நிலை திரும்புவுதால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். டில்லி சிங்குர் எல்லையில் இருந்து ஜந்தர் மந்தருக்கு தங்களது போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர்.
தீவிர பாதுகாப்பு
டில்லியில் நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அவர்கள் அனுமதி கோரினர். ஆனால், 'கோவிட் பரவல் ஏற்படும்' எனக் கூறி போலீசார் மறுத்தனர். இதையடுத்து டில்லி சிங்குர் எல்லையில் இருந்து டில்லி ஜந்தர் மந்தருக்கு போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர். அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேருந்துகளில் ஜந்தர் மந்தர் வந்து சேர்ந்தனர். பிகேஎஸ் விவசாய சங்கத் தலைவர் திகைத் தலைமையில் ஜந்தர் மந்தரில் அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க
விவசாய நிதி உதவி திட்டம்: தமிழகத்தில் மட்டும் 7.22 லட்சம் போலிகள் பயன்!
திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு: கர்நாடக அரசு அசத்தல்!
Share your comments