1. செய்திகள்

கோவையில் வரும் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

T. Vigneshwaran
T. Vigneshwaran

Farmers Grievance Meeting

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் செப்டம்பர் 30ம் தேதி காலை 11 மணி அளவில் நடக்கிறது.

இதில், கோவை மாவட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் விவசாயம் குறித்தும் அதன் தொடர்புடைய துறைகள் குறித்தும் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டமானது ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் விவசாயிகளுக்கு குறைதீர் கூட்டமாக நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த மாதத்துக்கான கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுக்கலாம்.

இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிக்கலாம். மேலும், இதில், வோளண்மை, தோட்டக்கலைத்துறை, நீர்பாசனம், கூட்டுறவு, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக கழகம், கால்நடை, மின்சாரம், தொடர்புடைய கருத்துக்களை விவசாயிகள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், விவசாயத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது.

மேலும், இதுகுறித்து விவசாயிகள் மனுவாகவும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்ட அரங்கிற்கு வரும் முன் கணிணியில் தங்களது பெயர் முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவை பதிவு செய்ய வேண்டும். மேலும், மனுக்களை கொடுக்கும் முன் ஒப்புதல் பெற்று, கணிணியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

பணத்தை இருமடங்காக பெருக்க சூப்பர் திட்டம்

நோய் தாக்கும் மாடுகளை தனிமைப்படுத்துவது ஏன்?

English Summary: Farmers Grievance Meeting to be held on 30th in Coimbatore

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.