தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ம் தேதி தண்ணீர் திறந்து வைத்தார். அந்த தண்ணீரானது சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை கடந்து கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது.
மேட்டூர் அணை திறப்பு
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டார். ஆண்டுதோறும் சற்று முன்பின்னாக நடக்கும் நிகழ்வுதான் இது என்றாலும் இந்த ஆண்டில் இதற்குச் சில முக்கியத்துவங்கள் கூடியுள்ளன. அந்த முக்கியத்துவங்கள் தமிழக வேளாண்மையின் நிலை குறித்து நம்பிக்கை தரக்கூடியதாகவும் இருக்கின்றன.
டெல்டா மாவட்டங்களில் பாயும் காவிரி நீர்
நேற்று நண்பகல் 12 மணியளவில் விநாடிக்கு 4000 கன அடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது டெல்டா மாவட்டங்களை நோக்கி சென்று கொண்டுள்ளது.
முக்கொம்புக்கு வந்த நீர்
இந்த தண்ணீரானது திருச்சி மாவட்டம் முக்கொம்புக்கு இன்று அதிகாலை வந்தடைந்தது என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடைமடைக்கும் பலன் உண்டு
இதற்கு முன்பு பலமுறை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டாலும் அது கடைமடைக்கு வந்துசேராத நிலை இருந்தது. தற்போது 9 மாவட்டங்களில் ஏறக்குறைய 4,000 கிமீ தூரத்துக்குத் தூர்வாரும் பணிகள் நடந்துவருகின்றன.
அணையைத் திறந்துவிடுவதற்கு முன்னதாக, கல்லணையில் நடந்துவரும் சீரமைப்புப் பணிகளையும் தூர்வாரும் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தூர்வாரும் பணிகளால் மேட்டூரிலிருந்து வரும் தண்ணீர் கடைமடைவரை சென்று சேரக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது
மேலும் படிக்க.....
8% மகசூலை அதிகரிக்க உதவும் நானோ யூரியா- விவசாயிகள் கவனத்திற்கு!
மண்ணைக் குளிர்விக்கும் கோடை மழை- உழவு செய்தால் கோடி நன்மை!
தேனியில் உரிய பருவத்தில் பாசன நீர்! உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு
Share your comments