1. செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா தொற்று

T. Vigneshwaran
T. Vigneshwaran

செவ்வாயன்று தமிழ்நாட்டில் 11,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனுடன் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 23,78,298 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று சுமார் 793 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா கொடியநோயின் இரண்டாவது அலை குறைந்து வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பின் அளவு படிப்படியாக குறைந்துகொண்டு இருந்தது.ஆனால் நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே கொரோனா தொற்றால் 267 பேர் தங்கள் உயிரை இழந்தனர். இதனுடன் தமிழகம் முழுவதிலும் கொரோனாவின் பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 30,068 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா கொடியநோயால் பாதிக்கப்பட்டவர்களில் அரசு மருத்துவமனைகளில் 148 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 119 பேரும்  இறந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 30,068-ஐ எட்டியுள்ளது.

தமிழகத்தில் இன்று 23,207 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 22,23,015 ஆக உயர்ந்துள்ளது.மேலும்,இந்தியாவில் ஒரே நாளில் சுமார் 1,07,628 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

கடந்த 25 நாளாக தமிழகத்தில் தொடர்ந்து ஒரு நாள் தொற்றின் அளவில் கொரோனா தோற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. 35000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு கணிசமாக இறங்கி தற்போது 12,000-க்கும் கீழே குறைந்துள்ளது.

தொற்று வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், நாளை பிரதமரை சந்திக்கவிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தடுப்பூசிக் குறித்தும், கருப்பு பூஞ்சை நோய் மருந்துகள் குறித்தும் பிரதமருடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் ஊரடங்கால் தொற்று எண்ணிக்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.தொற்று
எண்ணிக்கைக் குறைந்து வரும் நிலையில் பல தளர்வுகளுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க:

7.3 கோடிக்கும் அதிகமானோருக்கு Covid தடுப்பூசி!

கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு நோய் தொற்று உறுதி!

 

English Summary: Increased covid-19 cases in Tamil Nadu drastically in a single day-

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.