1. செய்திகள்

விவசாயிகள் கொண்டாடிய போகி பண்டிகை! - புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து கொண்டாட்டம்!

Daisy Rose Mary
Daisy Rose Mary


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது. அதையொட்டிய போகி பண்டிகையின் போது பழைய பொருட்களுடன் மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்ட நகல்களையும் தீயில் எரித்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதாரவான போராட்டங்கள்

இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் சுமூக உடன்பாடு எட்டப்பாத நிலையில், மத்திய அரசு, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து வருகிறது.

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடைவிதித்த உச்சநீதிமன்றம்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் வகையில் மாநிலம் முழுவதிலும் பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு ஒரு சிறப்பு குழுவை அமைத்தோடு, மறு உத்தரவு வரும்வரை புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

போகி கொண்டாட்டத்தில் சட்ட நகல் எரிப்பு

இந்நிலையில், நாடு முழுவதும் பண்டிகைக்கால கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட விவசாய பெருமக்கள் உட்பட அனைவரும் தயாராகி வருகின்றனர். இதையொட்டிய போகிப் பண்டிகையின் போது பழைய கழிதலும், புதியன புகுதலுமாக பழைய பொருட்கள் தீயிட்டு எரிப்பது வழக்கம்.
தமிழகத்தில் பழைய பொருட்களுடன் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்ட நகல்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. அப்போது மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் படிக்க... 

மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன்பு ஆஜராக மாட்டோம்- விவசாயிகள் அதிரடி!

 

English Summary: Farmers in tamil nadu celebrated Bhogi by burning copies of new agricultural laws Published on: 13 January 2021, 05:27 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.