Krishi Jagran Tamil
Menu Close Menu

மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Tuesday, 12 January 2021 04:34 PM , by: Daisy Rose Mary

Credit : Times of india

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில், மறு உத்தரவு வரும் வரை 3 வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.
பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் சுமூக உடன்பாடு எட்டப்பாத நிலையில், மத்திய அரசு, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாகவும் பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகளுடனான மத்திய அரசின் பேச்சுவார்த்தைகளில் உச்ச நீதிமன்றம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. அதோடு, குழு அமைத்து பேச்சுவார்த்தைக்கான சூழலை எளிதாக்கவும் நிலைமையை சரிபடுத்தவும் வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறுத்தாவிட்டால், உச்ச நீதிமன்றம் நிறுத்தும் என்று தெரிவித்தது.

இடைக்காலத்தடை

அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அந்த வழக்குகளை இன்று மீண்டும் விசாரித்தது. அப்போது, 3 புதிய வேளாண் சட்டங்களையும் அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மறு உத்தரவு வரும்வரை இந்த உத்தரவு தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறப்பு குழு அமைப்பு

பாஜக கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் ஒரு சிறப்பு குழுவினை அமைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் அடங்கிய உத்தரவிட்டுள்ளனர்.

சிறப்பு குழு உறுப்பினர்கள்

உச்ச நீதிமன்றம் முன்மொழிந்த குழுவில், பாரதிய கிசான் சங்கத் தலைவர் ஜிதேந்தர் சிங் மன், வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி, அனில் தன்வத், தெற்காசியாவின் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பிரமோத் கே. ஜோஷி ஆகியோர் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க..

நெற்பயிரில் குலை நோய் தாக்குதல் - விவசாயிகள் கவலை!!

கொட்டித் தீர்க்கப் போகிறது மிக கனமழை -வானிலை மையம் எச்சரிக்கை!

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

Farm laws agriculture laws supreme court stayed on farm laws Farmers talks on agriculture laws வேளாண் சட்டங்கள் stay for news agriculture laws வேளாண் சட்டங்களுக்கு தடை
English Summary: Interim stay to implement agricultural laws till re-order says supreme court

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
  2. மரச்செக்கு எண்ணெய்த் தயாரிப்பில் அசத்தல் லாபம் பெரும் விவசாயி செல்வம்!
  3. சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
  4. புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருவாய் உயரும் - சர்வதேச நிதியம் கருத்து!
  5. Budget 2021 Mobile App : பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களும் உங்கள் கைகளில்!
  6. வாழை பயிரில் கூட்டு ஆராய்ச்சி : வேளாண் பல்கலை நைஜீரியா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
  7. வேளாண் பல்கலைக்கழத்தில் 21 காலிப் பணியிடங்கள்! - உடனே விண்ணப்பிக்க... முழு விபரம் உள்ளே!!
  8. வெள்ளத்திலும் தாக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா! இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு!
  9. டிராக்டர் பேரணியில் வன்முறை! போராட்டத்தில் இரு விவசாய சங்கங்கள் வாபஸ்!
  10. நாமக்கல் மாவட்டத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம்!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.