தமிழக விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
சட்டசபைக் கூட்டத்தொடர் (Assembly Session)
தமிழக சட்டசபையில் கடந்த 23-ந்தேதி 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
நகைக்கடன் தள்ளுபடி (Jewelry discount)
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
கடன் தள்ளுபடி (Debt waiver)
மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கூடுதல் மகிழ்ச்சி (Extra pleasure)
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி குறித்த தமிழக அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
முதலமைச்சரின் அறிவிப்பை விவசாயச் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
மேலும் படிக்க....
ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- தமிழக அரசு அறிவிப்பு!
ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம்!
மாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை முறைகள் குறித்த இலவச பயிற்சி!
Share your comments