மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை (3 Agri Laws) எதிர்த்து, விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், டிராக்டர் பேரணியும் கடந்த குடியரசு தினத்தன்று நடந்து வன்முறையில் முடிந்தது. அடுத்து சக்கா ஜாம் (Sakka Jam) என்ற போராட்டத்தை தொடங்கி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கினர். தற்போது புதிய யுக்தியாக போட்டோ போராட்டத்தை (Photo Ptotest) கையில் எடுத்துள்ளனர் விவசாயிகள்.
ராணுவம் மற்றும் போலீசில் பணியாற்றும் தங்கள் மகன் அல்லது மகளின் புகைப் படங்களுடன் (Photos), போராட்டத்துக்கு வரும்படி, விவசாயிகளுக்கு, விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்ட விரோதம்
போராட்டக்காரர்களுக்கு, டில்லி, ஹரியானா, உத்தர பிரதேச அரசுகள், 'நோட்டீஸ்' கொடுத்து உள்ளன. சட்டவிரோதமாக நடக்கும் போராட்டத்தை கைவிடும்படி, அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் (Rakesh thigayath) கூறியுள்ளதாவது: மாநில அரசுகள் கூறி உள்ளதால், மாநில நிர்வாகம், நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எங்கள் கோரிக்கைகளுக்கு, மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். ராணுவம் (Military) மற்றும் போலீசில், விவசாயிகளின் மகன் அல்லது மகள்களும் பணியாற்றுகின்றனர். அடுத்தக்கட்ட போராட்டத்தின்போது, அவர்களது புகைப்படங்களுடன் வரும்படி, விவசாயிகளை கேட்டுள்ளோம். ராணுவம் மற்றும் போலீசாரை மதிக்கிறோம். நோட்டீஸ் அனுப்பி எங்களை முடக்க நினைக்க வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.
திகாயத்தும், டில்லி போலீசில் சில காலம் பணியாற்றியுள்ளார். கடந்த, 1993ல் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, ராஜினாமா செய்தார்.
விரைவில் தீர்வு
மத்திய பிரதேசத்தின் இந்துாரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (Narendra Singh Thomar) கூறியதாவது: விவசாய சட்டங்களை, ஒரு சில பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமே எதிர்க்கின்றனர். கடந்த லோக்சபா தேர்தலின்போது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும், இதுபோன்ற சீர்திருத்தத்தை கொண்டு வருவதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது அரசியல் செய்கின்றனர். அவர்களுடைய முயற்சி பலிக்காது. விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவதற்கு, காங்கிரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. பேச்சின் மூலம், விவசாயிகள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என முழுமையாக நம்புகிறோம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்திய சக்கா ஜாம் போராட்டம்!
புறஊதாக் கதிர்களில் இருந்து தோலைப் பாதுகாக்க திராட்சைப்பழம்: ஆய்வில் தகவல்
Share your comments