ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் ஜூன் மாதம் குறுவை சாகுபடி பணிகள் தொடங்குவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் நடைபெறும் சாகுபடி (Cultivation) பணிகளுக்காக கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
உழவுப் பணி
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள வயல்களில் உழவு பணிகள் நிறைவடைந்து, நெல் விதைகளை விவசாயிகள் தெளித்து வருகின்றனர். தெளிக்கப்பட்ட விதைகள் முளைத்து வளருவதற்கு அப்பகுதி விவசாயிகள் ஆற்று தண்ணீரை விட மழை நீரையே அதிகம் எதிர்பார்க்கிறார்கள். மழைநீர் (Rain water) மூலமாக தெளிக்கப்பட்ட விதைகள் எளிதாக செழித்து வளரும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
மழை பெய்யுமா?
இந்த நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால் நெல் விதைகள் முளைத்து வளருவதற்கு ஏற்றவாறு மழை பெய்யவில்லை. மேலும், ஆற்றில் வரும் தண்ணீர் பாசன வாய்க்கால் மூலம் கொண்டு செல்ல முடியவில்லை என்பதும் விவசாயிகளின் வேதனையாக உள்ளது. குறுவை விதைகள் தப்பிக்க மழை பெய்யுமா? என்பது பெரும்பாலான விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க
Share your comments