1. செய்திகள்

கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது மத்திய அரசு!

R. Balakrishnan
R. Balakrishnan
PM Modi

Credit : Dinamalar

நாடு முழுவதும் கூட்டுறவு கொள்கையை உருவாக்கும் வகையில், கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகத்தை பிரதமர் மோடி (PM Modi) தலைமையிலான மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த 2019ம் ஆண்டு பொறுப்பேற்று, 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. மத்திய அமைச்சரவையில் தற்போது, 53 பேர் அமைச்சர்களாக உள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 7 மாநில சட்டசபைத் தேர்தல் (Assembly Election) உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, பா.ஜ., பொதுச் செயலர் சந்தோஷ் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி பல முறை ஆலோசனை நடத்தினார். அதன்படி, பீஹார் முன்னாள் முதல்வர் சுசில் குமார் மோடி, அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால், காங்கிரசிலிருந்து விலகிய ஜோதிர் ஆதித்யா சிந்தியா உள்ளிட்டோருக்‍கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும், புதிய அமைச்சரவை இன்று (ஜூலை7) பதவி ஏற்கலாம் அல்லது 9ம் தேதி பதவியேற்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூட்டுறவு அமைச்சகம்

இந்நிலையில், 'கூட்டுறவு அமைச்சகம்' என்ற புதிய அமைச்சரவையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உருவாக்கி உள்ளது. 'சஹ்கர் சே சமிர்தி' (ஒத்துழைப்பிலிருந்து செழிப்பு) என்ற கொள்கை பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 'கூட்டுறவு அமைச்சகம்' நாடு முழுக்க கூட்டுறவுத் துறையை (Co-Operative Department) கவனிப்பதற்காகவும், கூட்டுறவுத் துறைக்கான புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், நாடு முழுக்க ஒரே மாதிரியான கூட்டுறவு கொள்கையை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க

தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் மீன்வளம்-நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்!

நிரந்தர வைப்புத் தொகையை புதுப்பிக்காவிடில் வட்டி குறைக்கப்படும்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

English Summary: The Central Government has created a separate ministry for the co-operative sector!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.