கஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏப்ரல் மாதம் தொடங்கியதைத்தொடர்ந்து சொர்ணவாரி பருவத்திற்காக நெல் நாற்று நடவுப் பணிகளை முனைப்புடன் தொடங்கியுள்ளனர்.
சொர்ணவாரி பருவம்
இளவேனிற்காலமான சொர்ணவாரிப் பருவம் என்பது, தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். ஏப்ரல் - மே ( சித்திரை - வைகாசி) மாதங்களில் துவங்கும் இப்பருவம், ஜூலை - ஆகஸ்ட் (ஆடி - ஆவணி) மாதங்களில் முடிவடைகிறது. 120 நாட்களைக் கொண்ட இந்த சொர்ணவாரிப் பருவம், குறுகியகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
காஞ்சிபுரத்தில் நடவுப் பணிகள் தொடக்கம்
சொர்ணவாரி பருவத்திற்கான நெல் நடவு பணியை, விவசாயிகள் துவக்கி உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏரி நீர் மற்றும் நிலத்தடி நீரை பயன்படுத்தி, விவசாயிகள், நெல் பயிரிட்டு வருகின்றனர். பிப்ரவரி மாத இறுதி மற்றும் மார்ச் துவக்கத்தில் நெல் அறுவடை செய்த விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி, சொர்ணவாரி பருவத்திற்கு தற்போது, நெல் நடவு செய்யும் பணியை துவக்கி உள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியம் கோவிந்தவாடி, புள்ளலுார், தாங்கி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், நெல் நடவு செய்வதற்கு வயலில், டிராக்டர் வைத்து உழுகின்றனர். கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் சில விவசாயிகள், நெல் நாற்று நடும் பணியை துவக்கி உள்ளனர்; சிலர், நேரடி நெல் விதைப்பை துவக்கி உள்ளனர்.
மேலும் படிக்க...
விவசாயிகள் தங்கள் விவசாயத்தோடு தேனீ வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் - மோடி உரை!!
பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!
கணக்கில்லா நன்மை தரும் கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி!
Share your comments