மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி (Tractor rally) துவங்கியது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை (ஜன.,08) 8ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு (Agriculture Laws) எதிராக இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
விவசாயிகள் டிராக்டர் பேரணி:
கிழக்கு, மேற்கு டெல்லி உள்பட டெல்லியின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் (National Highways) விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் பேரணியையொட்டி ஹரியானாவின் குண்லி, மானேசர், பல்வால் ஆகிய தேசிய நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடிகளில் (Toll gate) பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் டிராக்டர் பேரணி நடைபெறும் சாலைகளில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னோட்டம்:
டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகத் கூறுகையில், ‛ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினவிழாவில் (Republic day) நடைபெறும் டிராக்டர் பேரணியின் முன்னோட்டமாக இந்த பேரணி நடைபெறுகிறது.' என்றார். வேளாண் சட்டங்களை எதிர்த்துப் விவசாயிகள் பல நாட்களாக போராடி வரும் நிலையில், இன்று டிராக்டர் பேரணி நடந்துள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கூடுதல் மகசூல் பெற வம்பன்-4 பாசிப்பயறு இரகம்!
காரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம்! வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்!
தென்னை ஆராய்ச்சி பணியைத் துவங்க வேண்டுமென விவசாயிகள் அரசிடம் கோரிக்கை!
Share your comments