மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கோட்டையை நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய திருத்தங்களுடன் புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் விவசாயிகளையும், சில்லரை வியாபாரிகளையும் பாதிக்கும் எனக் கூறும் விவசாயிகள் நேற்றும் இன்றும் (நவ., 26 & 27) தேதிகளில் டெல்லி கோட்டையை நோக்கி சென்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
போராட்டத்திற்கு அழைப்பு
இந்த போராட்டத்திற்கு பாரதிய கிசான் யூனியன் மற்றும் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்தன. இதையொட்டி ஏரானமான விசாயிகள் மாநிலம் முழுவதிலிருந்தும் டெல்லி நோக்கி படையெடுத்தனர். குறிப்பான பஞ்சாப் மாநில விசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
போலீஸ் அனுமதி மறுப்பு
இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத டெல்லி காவல்துறை, டெல்லிக்குள் நுழையும் அனைத்து பாதைகளையும் அடைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு வந்த விவசாயிகள் டெல்லியின் எல்லையிலேயே முகாமிட்டு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தடையை மீறி பேரணியாக செல்ல முயற்சிக்கும் விவசாயிகள் மீது போலீசார் விரட்டியடித்தவண்ணம் உள்ளனர். இதனால் டெல்லி எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
டெல்லி சிங்கு எல்லை
இந்நிலையில், இன்று காலையிலும் டெல்லியின் சிங்கு எல்லையில் (ஹரியானா-டெல்லி எல்லை) விவசாயிகள் பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இப்போராட்டம் காரணமாக சிங்கு எல்லையில் போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!
உழவர் -அலுவலர் தொடர்புத் திட்டம் சேலத்தில் அறிமுகம்!!
மானியத்தில் திறந்தவெளி கிணறு அமைக்க விண்ணப்பிக்கலாம்!!
Share your comments