மீரட், முசாபர்நகர், சஹாரன்பூர், பாக்பத், ஹப்பூர் மற்றும் அம்ரோஹா ஆகிய இடங்களில் விவசாயிகள் தங்களது டிராக்டர்களை நெடுஞ்சாலைகளின் இடது பாதையை மறித்து நிறுத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
டிராக்டர் அணிவகுப்பு பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) டிகாயிட் மற்றும் பிகேயு லோக்சக்தி ஆகியவற்றுடன் இணைந்த விவசாயிகளால் நடத்தப்படுகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்துவதற்கு தங்கள் ஒற்றுமையை தெரிவிக்க நெடுஞ்சாலைகளில் டிராக்டர்களை நிறுத்த BKU அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி அரசாங்கம் விவசாயிகளை மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே டிராக்டர் அணிவகுப்பு நடத்தப்படுகிறது என்று திகாட் (Tikait) தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை:
விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கோரிக்கையில் முதன்மையானது, விவசாய கடன் தள்ளுபடி மற்றும் பயிர்களுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை நிர்ணயம் போன்றவை ஆகும். பிப்ரவரி 12 அன்று, மூன்று மத்திய அமைச்சர்கள் சண்டிகரில் விவசாயிகளைச் சந்தித்து ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பிப்ரவரி 13 அன்று, விவசாயிகள் குழுக்கள் புது தில்லிக்கு அணிவகுப்பைத் தொடங்கின.
தற்போது விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நான்கு சுற்றுப் பேச்சு வார்த்தை நடந்துள்ளன. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பிப்ரவரி 18 அன்று, அரசாங்கம் ஐந்து வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டு மொத்தமாக ஐந்து பயிர்களை MSP இல் பாதுகாக்க முன்வந்தது. ஆனால், அரசின் கோரிக்கையை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.
டிராக்டர் அணிவகுப்பு:
தற்போது டில்லிக்கு செல்லும் நெடுஞ்சாலையில், குறிப்பாக டிவைடர் நெடுஞ்சாலையில் டிராக்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளது. டிராக்டர் அணிவகுப்பு பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) டிகாயிட் மற்றும் பிகேயு லோக்சக்தி ஆகியவற்றுடன் இணைந்த விவசாயிகளால் இன்று நடத்தப்பட்டது.
“எங்களுக்கு (விவசாயிகளுக்கு) இன்னும் (அரசாங்கத்திடமிருந்து) எந்த செய்தியும் வரவில்லை. பேச்சுவார்த்தைக்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கும். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நாங்கள் இங்கு போராட்டம் நடத்துகிறோம். எனவே, எப்போது கூட்டம் நடந்தாலும், நாங்கள் கூட்டத்தில் பங்கேற்போம், ”என்று ஒரு விவசாயி தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
எல்லையில் தடுப்பு வேலிகள் அமைத்து டெல்லி போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். சோதனை காரணமாக டெல்லியில் இருந்து நொய்டா நோக்கி சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிப்ரவரி 29 ஆம் தேதி வரை விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் தங்கியிருப்பார்கள். அரசின் பேச்சுவார்த்தையினை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படும் என்று விவசாயி தலைவர் சர்வான் சிங் பாந்தர் பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
Read more:
கால்நடை தீவன உற்பத்தி- பிப்ரவரியில் TNAU மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
நெல்லில் விதை உறக்கம்- என்ன செய்து நீக்கலாம்? வல்லுநர்களின் விளக்கம்
Share your comments